உண்மையின் உறைவிடம்…

Gavaskar blasts pakistan

பாகிஸ்தான் மேல நடவடிக்கை எடுங்க – கோபப்பட்ட கவாஸ்..!

மீடியா சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ஊடக சந்திப்பை பாகிஸ்தான் அணி ரத்து செய்தது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுமாதிரி செயல்படுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஊடக சந்திப்பில் இருந்து விலகியது.

இந்த நிலையில் நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தானுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்ர கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக பாகிஸ்தானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Total Page Visits: 1065 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!