உண்மையின் உறைவிடம்…

Gold Rate Rises

உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..?

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.

நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.83,440 க்கு விற்பனையானது. கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 வரை உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 வரை உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனையானது.. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரக்கூடிய சூழலில், இன்றாவது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி அளித்தது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120ம், ஒரு கிராம் ரூ.140 உயர்ந்தது. இதன் காரணமாகஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,640 ஆகவும்ஒரு சவரன் நகை ரூ.85,120 ஆகவும் விற்பனை ஆனது.தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது

Total Page Visits: 924 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!