Vijay condemns MKStalin | தவெக விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், “சிஎம் சார், ஸ்டாலின் சார், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில், “சில அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைப் பார்த்து ராத்திரியில் தூக்கம் வரவில்லை” என்று சொன்னீர்கள். அந்த வீடியோகூட இன்னும் இணையத்தில் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஒருவேளை அவர் என்றாவது அசந்து தூங்கும்போது, ‘சார் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீர்கள்?’ என்று யாராவது அவரை எழுப்பிக் கேட்டால், ‘விசில் சின்னத்துக்கு’ என்பார்.” என்று விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
Total Page Visits: 107 - Today Page Visits: 2
