உண்மையின் உறைவிடம்…

Today weather update | வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Total Page Visits: 160 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!