Minister sivashankar byte | உடனடியாக நடவடிக்கை..!
ஆர்கே நகர், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் மின்வாரிய பொறியாளர்கள் பற்றாக்குறை, கேபிள் பிரச்சனைகள் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி
யளித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மற்றும் 3 தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மின்வாரிய பொறியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 தொகுதிகளில் இருக்கும் மின்வாரிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் துணை மின்நிலையம் மற்றும் கொருக்குப்பேட்டை துர்கா நகரில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,
பருவ மழைகாலங்களில் ஏற்படும் மின்தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வடசென்னை பகுதிக்குட்பட்ட ஆர்கே நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தண்டையார்பேட்டையில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். இந்த தொகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருக்கும் பொறியாளர் பற்றாக்குறை மற்றும் கேபிள் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இந்த பகுதிகளில் உள்ள பழைய கேபிள்கள் மாற்றப்பட்டு புதிய கேபிள்கள் அமைக்கும் விரைவில் செய்து முடிக்கப்படும்.
தற்போது தண்டையார்பேட்டை தொற்றுநோய் மையத்தில் கட்டப்பட்டு வரும் துணை மின்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால. இந்த 3 தொகுதிகளில் இருக்கும் மின்பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
கடந்த காலங்களில் வடசென்னை வளர்ச்சியடையாமல் இருந்தது. ஆனால் தமிழக முதல்வர் வடசென்னை வளர்ச்சிக்காக மேற்கொண்டுள்ள பல திட்டங்களால் வடசென்னையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக வடசென்னையில் இருந்த குறுகிய சாலையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்கே நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் மின்வாரிய பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும். மேலும் இந்த பகுதிகளில் ஏற்படும் மின்வாரிய பிரச்சனைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எனக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொகுதிகளில் மின்வாரியத்தில் இருக்கும் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு இனி வரும் காலங்களில் அந்த பிரச்சனை இல்லாமல் சரிசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
