உண்மையின் உறைவிடம்…

chennai koyambedu arrest | சென்னை கோயம்பேடு கைது

கோயம்பேடு பகுதியில் வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி, பணம் பறித்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது. செய்யப்பட்டுள்ளனர்

சென்னை, கோயம்பேடு, அண்ணா தெருவில் தங்கி முட்டை வியாபாரம் செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன்,என்பவர் அங்குள்ள கடைகளுக்கு தினந்தோறும் முட்டை சப்ளை செய்துவிட்டு பின்னர் கடைகளுக்குச் சென்று முட்டைகளுக்கான பணம் வசூல் செய்து வருகிறார். பார்த்திபன் சப்ளை செய்த கடைகளில் பணம் வசூல் செய்து கோயம்பேடு, A ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தெரிந்த நபர்களான ஜெய் (எ) விக்னேஷ் மற்றும் துரை (எ) துரைமுருகன் ஆகிய இருவரும் சேர்ந்து, பார்த்திபனை வழிமறித்து, தகாத வார்த்தைகள் பேசி, பணம் கேட்டுள்ளனர். பார்த்திபன் பணம் தர மறுக்கவே, அவரை பீர் பாட்டிலால் தாக்கி, அவர் சட்டைப்பையில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.1,200/-ஐ பறித்துக் கொண்டு, இருவரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பார்த்திபன், K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.ஜெய் (எ) விக்னேஷ், சேமாத்தம்மன் நகர், கோயம்பேடு, சென்னை, 2.துரை (எ) துரைமுருகன், சின்மையா நகர், சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்..
.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (06.11.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Total Page Visits: 578 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!