dindugal ganja sale
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
திண்டுக்கல்லில் தொடர்ந்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசாரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வைரவன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேர் போலீசார் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் சுற்றி வளைத்து பிடித்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
