sunita-williams-retires | அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, டிசம்பர் 27, 2025 முதல் இவரது ஓய்வு அமலுக்கு வந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. 286 நாட்கள் (9 மாதங்கள்) நாட்களுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 3 முறை விண்வெளிக்கு சென்று, 608 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
