உண்மையின் உறைவிடம்…

Nainar about sengottaiyan | அமைச்சரை சந்தித்தது ஏன்

அமைச்சர் சேகர் பாபுவை செங்கோட்டையன் சந்தித்தது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்” என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன்.

பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், திமுக வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என்று பாஜக கூட்டணியினரும் மாறி மாறி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்தது பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்று உறுதிப்படுத்தினார். அமைச்சர் சேகர் பாபுவை செங்கோட்டையன் சந்தித்தது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். “செங்கோட்டையன் பாஜகவுடன் நல்ல புரிதல் உள்ளவர். அமித்ஷாவை சந்தித்தவர். இப்போது தவெகவில் இணைந்தது ஏன் என்று தெரியவில்லை. சேகர் பாபுவை சந்தித்தது ஏன்? அது தெளிவாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Total Page Visits: 61 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!