உண்மையின் உறைவிடம்…

TVK Whistle symbol | விசில் போடு ஆர்மி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது.

தவெகவின் இந்த சின்ன ஒதுக்கீடு கட்சியின் தேர்தல் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விசில் சின்னம் தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட சின்னம் என்பதால், வாக்காளர்களிடம் எளிதில் அடையாளம் காணப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், விசில் சின்னத்தை மையமாக வைத்து தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த சின்ன ஒதுக்கீடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க உதவும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Total Page Visits: 126 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!