Rahul Gandhi congress | ராகுல் காந்தியின் முடிவு
ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், இதனை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்முன்னாள் மாநில தலைவர்களான கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு, கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதே போன்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பிரியங்கா காந்தியும் மகளிர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன், ராணி, அஜினா சையத் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
