PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்
ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,
அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன.
இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை.
நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும் என கூறினார்.
Total Page Visits: 601 - Today Page Visits: 1
