உண்மையின் உறைவிடம்…

Srilanka flood death | சுழற்றி அடிக்கும் வெள்ளம்

இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளநீரில் வீடுகள் மூழ்கியதால் பலர் கூரைக்கு ஏரிச்சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர்களில் சென்று மக்களைக் காப்பாற்ற முயல்கின்றன.

17 வட்டாரங்களிலிருந்து கிட்டத்தட்ட 6,000 பேர் அரசாங்க அவசரகாலக் கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறி பத்திரமான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பல இடங்களில் பாறைகள், மண், மரங்கள் ஆகியவை சரிந்து சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் விழுந்ததால், பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Total Page Visits: 57 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!