உண்மையின் உறைவிடம்…

MK Stalin announced | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கப்படும் உரிமைத் தொகை 1,000 ரூபாயை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு 1,000 ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்தது.

நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த திட்டத்தில் பயனடைவோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. இன்னும் கூட தகுதி உள்ள பெண்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் நிச்சயமாக 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி மகளிர் உரிமைத் தொகை இன்னும் உயரும் என்று சொல்லியிருக்கிறேன். அதுவும் நிச்சயமாக நடக்கும் என தெரிவித்தார்.

Total Page Visits: 143 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!