உண்மையின் உறைவிடம்…

ECR New plan | ஈசிஆரின் புதிய அடையாளம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்து மக்களும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கோயம்பேட்டில் இருந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட மாபெரும் பேருந்து நிலையம், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், சைதாப்பேட்டையில் கட்டப்பட்ட அரசு பொதுமருத்துவமனை, கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் வண்ணமீன் வர்த்தக மையம் என பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்திய திமுக, தற்போது ஈசிஆர் என அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையின் அடையாளத்தையே மாற்றியமைக்கும் வகையில் 2 மாபெரும் திட்டங்களை திட்டமிட்டு தற்போது அதற்கான பணிகளையும் துவக்கியுள்ளது.ஈசிஆர் என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் பைக் ரைடு, முட்டுக்காடு படகு இல்லம், நித்தியகல்யாணி கோவில், கோவளம் தர்கா, மகாபலிபுரம் என பல அடையாளங்கள் இருந்தாலும் அனைத்து அடையாளங்களை மிஞ்சும் வகையில் தமிழக அரசு தற்போது முட்டுக்காடு பகுதியில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் மாநாட்டு மையம் என்ற பெயரில் மாபெரும் அரங்கம் ஒன்றை கட்ட திட்டமிட்டு தற்போது அதற்கான பணிகளை துவக்கியுள்ளது. இந்த மாநாட்டு மையத்தில் 10 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கண்காட்சி மண்டபம், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 1500 அரங்கம் கொண்ட அரங்கம் என சுமார் 5 லட்சம் சதுர அடியில் கலைஞர் மாநாட்டு மையம் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே ஈசிஆர் செல்ல விரும்புவர்கள் திருவான்மியூர், நீலாங்கரை முதல் சோழிங்கநல்லூர் சந்தப்பு வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரும் நிலையில் கலைஞர் மாநாட்டு மையம் திறக்கப்பட்டால் ஈசிஆர் செல்பவர்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஈசிஆர் செல்ல நினைத்தால் உடனடியாக செல்ல வேண்டும் என மனநிலையை மக்களுக்கு உருவாக்கும் விதமாக மற்றொரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அனைத்து பகுதிகளையும் கடந்து ஈசிஆரில் பயணிக்கும் வகையில் ரூ.2,100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் திட்டம்தான் அது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக சுமார் 14.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலத்தை அமைக்கிறது தமிழக அரசு.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால், சாதாரணமாக திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை செல்ல ஆகும் பயணநேரம், மூன்றில் ஒரு பங்காக குறையும். ஈசிஆரின் புதிய அடையாளமாக அமையும் கலைஞர் மாநாட்டு மையமும், இந்த மையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஏதுவாக கட்டப்பட உள்ள மேம்பாலமும் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில் திமுக பெயரை மீண்டும் பதிவு செய்யும் திட்டமாக அமைந்துள்ளன.கோயம்பேட்டில் இருந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட மாபெரும் பேருந்து நிலையம், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், சைதாப்பேட்டையில் கட்டப்பட்ட அரசு பொதுமருத்துவமனை, கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் வண்ணமீன் வர்த்தக மையம் என பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்திய திமுக, தற்போது ஈசிஆர் என அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையின் அடையாளத்தையே மாற்றியமைக்கும் வகையில் 2 மாபெரும் திட்டங்களை திட்டமிட்டு தற்போது அதற்கான பணிகளையும் துவக்கியுள்ளது.ஈசிஆர் என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் பைக் ரைடு, முட்டுக்காடு படகு இல்லம், நித்தியகல்யாணி கோவில், கோவளம் தர்கா, மகாபலிபுரம் என பல அடையாளங்கள் இருந்தாலும் அனைத்து அடையாளங்களை மிஞ்சும் வகையில் தமிழக அரசு தற்போது முட்டுக்காடு பகுதியில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் மாநாட்டு மையம் என்ற பெயரில் மாபெரும் அரங்கம் ஒன்றை கட்ட திட்டமிட்டு தற்போது அதற்கான பணிகளை துவக்கியுள்ளது. இந்த மாநாட்டு மையத்தில் 10 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கண்காட்சி மண்டபம், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 1500 அரங்கம் கொண்ட அரங்கம் என சுமார் 5 லட்சம் சதுர அடியில் கலைஞர் மாநாட்டு மையம் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே ஈசிஆர் செல்ல விரும்புவர்கள் திருவான்மியூர், நீலாங்கரை முதல் சோழிங்கநல்லூர் சந்தப்பு வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரும் நிலையில் கலைஞர் மாநாட்டு மையம் திறக்கப்பட்டால் ஈசிஆர் செல்பவர்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஈசிஆர் செல்ல நினைத்தால் உடனடியாக செல்ல வேண்டும் என மனநிலையை மக்களுக்கு உருவாக்கும் விதமாக மற்றொரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அனைத்து பகுதிகளையும் கடந்து ஈசிஆரில் பயணிக்கும் வகையில் ரூ.2,100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் திட்டம்தான் அது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக சுமார் 14.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலத்தை அமைக்கிறது தமிழக அரசு.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால், சாதாரணமாக திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை செல்ல ஆகும் பயணநேரம், மூன்றில் ஒரு பங்காக குறையும். ஈசிஆரின் புதிய அடையாளமாக அமையும் கலைஞர் மாநாட்டு மையமும், இந்த மையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஏதுவாக கட்டப்பட உள்ள மேம்பாலமும் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில் திமுக பெயரை மீண்டும் பதிவு செய்யும் திட்டமாக அமைந்துள்ளன.

Total Page Visits: 129 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!