உண்மையின் உறைவிடம்…

Sarathkumar greets karthika | கார்த்திகாவுக்கு பாராட்டு

ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் கபடி விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

உலக அரங்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்த அணியில் துணை கேப்டனாக இருந்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவின் சிறப்பான ஆட்டத்தால் தங்கம் வென்றதை அடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ரா.சரத்குமார் கார்த்திகாவின் கண்ணகி நகர் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்பொழுது பேசிய சரத்குமார் கார்த்திகாவின் கபடி விளையாட்டிற்கு மற்றும் உடல் வலிமைபெற தேவையான உபகரணங்களை வாங்கி தருவதாக கூறினார்.

Total Page Visits: 580 - Today Page Visits: 4

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!