Tamilnadu fishermen welfare | இடித்து தள்ளப்பட்ட கூடாரம்
பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை பின்னும் கூடாரத்தை இடித்து தள்ளியதற்கு மீனவர் சங்கத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்தனர்..
தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு துரை மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி அமைப்பு செயலாளர் பனையூர் பெ. மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 197 வது வட்ட உறுப்பினர் திருமிகு மேனகா சங்கர் அவர்களை சந்தித்து பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை பின்னும் கூடாரத்தை தமிழ்நாடு மீனவர் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று இடித்து தள்ளியதற்கும், புதிய பள்ளி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைத்ததற்கும் மீனவர் சங்கத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்தனர்..
அத்துடன் இடித்த கட்டிடத்தின் கழிவுகள் இன்னும் ஆங்காங்கே உள்ளதால் படகு விடுவதற்கு இன்னும் சிரமமாக உள்ளதால் அதை முழுமையாக அகற்றக் கூறியும், மீனவரின் வீட்டு முன்னால் இருக்கும் உபயோகமற்ற துருப்பிடித்து விழக்கூடிய நிலையில் இருக்கும் கழிவுநீர் வெளியேற்றிக் குழாயினை அகற்றக் கோரியும் கோரிக்கை விடுத்தனர். இதில் சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பாக அவைத் தலைவர் திரு C. வெங்கடேஷ் , கவுன்சிலரின் கணவருக்கு சால்வை அணிவித்தார்.. உடன் மாவட்ட செயலாளர் திரு சாந்தகுமார்,மாவட்ட பொருளாளர் திரு கவியரசன் மற்றும் திரு. ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
