உண்மையின் உறைவிடம்…

Karur Money Theft

கார நிப்பாட்டு..! பணத்த எடு – சட்டுன்னு சிக்கிய திருடர்கள்

வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது
,
மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை சேர்ந்த தணிகாசலம்(26) சிவகங்கை சேர்ந்த ராஜேஷ்(28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் 2 காரில் வந்து கோவர்த்தனன் வந்த காரை மறித்து கழுத்தில் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வடமதுரை காவல் ஆய்வாளர் நிதிக்குமார், சார்பு வேலுமணி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு கார், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total Page Visits: 639 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!