DMK Youth conference | தயாராகும் திமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. தொடர்ந்து திமுக தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை விருதுநகரில் திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடும் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகுகின்றன. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
