உண்மையின் உறைவிடம்…

Tollgate public issue | சுங்கச்சாவடியில் சம்பவம்

சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் – செங்கம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் வேலை செய்யும் ஊழியர் விவசாயிகளிடம் தவறாக பேசி அட்டூழியம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் கடந்த 29-11-2025,
சனிக்கிழமை மாலை 4.30மணி அளவில் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் சட்ட விரோதமாக மண் திருடப்பட்டுள்ளதை ஆய்வு செய்துவிட்டு திரும்பி வரும்போது கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியரான பவுன் குமார் என்பவர் வாகனத்தை மறித்து வெளிப்புற வழியில் செல்லக்கூடாது சுங்கம் கட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாகனத்தை வீடியோ எடுத்ததோடு இல்லாமல் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகளிடம், விவசாயிகளிடம் சுங்க சாவடி கட்டும் போது என்ன செய்தீர்கள்? பணம் கொடுக்காமல் போனால் வாகனத்தை உடைப்பேன் என்றும், ஆணவத்தோடு பேசியுள்ளார்.
அதன் பிறகு வாகனம் சுங்கச்சாவடியை
 கடந்த பிறகு வண்டியின் பதிவு எண்ணை வைத்து சுங்க கட்டணத்தை எடுத்துள்ளார். இதுபோன்ற செயலை செய்த சுங்கசாவடி ஊழியர் பவுண்குமார் நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு என்று பொதுமக்கள் கேள்வி எழுகின்றனர். அதனை தொடர்ந்து
நேற்று காலை 30.11.2025 சுமார் 10 மணி அளவில் சுங்கச்சாவடி ஊழியரை கண்டித்து பொதுமக்கள் மற்றும் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.மேலும்

அங்கு வந்த வடநாட்டை சார்ந்த சுங்கச்சாவடி தலைமை ஊழியர் சஞ்சித் என்பவர் அங்கு பணிபுரியும் தமிழக பெண்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி இந்தி மொழியில் திட்டியதை* அங்கிருந்த ஒரு உழவர் புரிந்துகொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எங்கள் வீட்டுப் பெண்களை தரக்குறைவாக பேசுவதற்கு அந்த நபருக்கு யார் அதிகாரம் அளித்தது*? உடனடியாக அந்த வடநாட்டு நபரை சுங்க சாவடியில் இருந்து நீக்கி தமிழ் தெரிந்தவர்களையும்,தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர்..

தொடர்ச்சியாக இதுபோன்ற வசூல் வேட்டை செயலில் ஈடுபடும் கரியமங்கலம்
சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து போராடிவரும் நிலையில் இப்படி நடந்து கொள்வது ஆணவத்தின் உச்சம். உடனடியாக நாங்கள் ஏற்கெனவே கொடுத்த பட்டியலில் உள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.Tollgate public issue | சுங்கச்சாவடியில் சம்பவம்

Total Page Visits: 608 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!