CM MK Stalin tweet | வேலு நாச்சியார் பெயர்
மதுரை மேலமடை சந்திப்பு பகுதியில் கட்டப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் சமூக வலைதள பதிவில்,
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. மதுரை – சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன். இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமையடைகிறோம். சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்
Total Page Visits: 133 - Today Page Visits: 1
