உண்மையின் உறைவிடம்…

Top 10 rowdy list | டாப் 10 ரவுடி பட்டியல்

புதுச்சேரியில் டாப் 10 ரவுடி பட்டியல் உள்ள பிரபல ரவுடி அய்யனாரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்த செல்வத்தின் மகன் தாடி அய்யனார் (எ) ராஜதுரை புதுச்சேரி டாப் 10 ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். இவர் மீது 4 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு, 6 கஞ்சா வழக்கு, வழிபறி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது கஞ்சா வழக்கில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மேற்கு காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் தாடி அய்யனார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி தாடி அய்யனார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர் இன்னும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார். இதனையடுத்து சிறையில் இருக்கும் அவரிடம் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான் நகலை போலீசார் வழங்கினர்.

Total Page Visits: 4825 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!