உண்மையின் உறைவிடம்…

puducherry family problem | கணவன் மனைவி சண்டை

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் காக்கினாடா அருகே அமைந்துள்ளது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், இங்கு பல்லா தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி பெர்மாடி நானி (30), இவரது மனைவி பெர்மாடி தேனா (26), இவர்களுக்கு 7 வயதில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளார். இந்த நிலையில் நானி அவபோது மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள்ளே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே இன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பெஃர்மாடி நானி அவரது மனைவி தேனாவை கையால் சரமாரியாக அடித்துள்ளார் இதில் அவரது கண் முகம் தலை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் காது மூக்கு வழியாக இரத்தம் வந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஏனாம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பு இடத்திற்கு வந்த போலீசார் உயர்ந்த பேனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Total Page Visits: 643 - Today Page Visits: 4

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!