avadi police station | உதவி கேட்ட மாணவன்
பள்ளி படிப்பை தொடர உதவிய மாணவனுக்கு பூந்தமல்லி காவல் ஆய்வாளர் உதவி செய்து சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவுரை வழங்கினார்.
ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த ஹரிஸ் என்ற 14-வயதுடைய சிறுவன், T12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு தனது பள்ளி படிப்பை தொடர உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிறுவனை ஆவடி சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நபி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்த்து, நன்கொடையாளர்கள் உதவியுடன் சிறுவனுக்கு சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து உதவிகளை செய்தார். இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் சிறுவனையும், பூந்தமல்லி காவல் ஆய்வாளரையும் நேரில் அழைத்து, ஆய்வாளருக்கு பாராட்டுகளையும், சிறுவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து நன்றாக படிக்கும்படி அறிவுரை வழங்கினர்.
