உண்மையின் உறைவிடம்…

Chennai police action | தவறவிட்ட தாலிச்செயின்

ஐஸ்அவுஸ் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் தவறவிட்ட சுமார் 5 சவரன் தாலிச்செயினை போலீசார் விசாரணை செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை, ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வேல்முருகன் நாணயத்துடன் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு உரிமையாளர் பற்றியும், ஏதேனும் புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கலைவாணன் என்பவர் அவரது மனைவியை பிரசவத்துக்காக திருவல்லிக்கேணி மருத்துவமனையில் சேர்த்த போது, அவரது மனைவி ரஞ்சனி தாலிச்செயினை கழற்றி வேல்முருகனிடம் கொடுத்துள்ளதும், அவர் ஜெராக்ஸ் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்ற போது கடையில் தவறவிட்டதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து கலைவாணன் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தள்ளதும் தெரியவந்தது.
இராயப்பேட்டை உதவி ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்ட கலைவாணன், திருவல்லிக்கேணி என்பவரின் மனைவி ரஞ்சனியிடம் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வேல்முருகனின் மனைவி தங்க தாலிச்செயினை பத்திரமாக ஒப்படைத்தார்.
தாலிச்செயினை நாணயத்துடன் ஒப்படைத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர், முறையான விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட உரிமையாளரிடம் நகைகளை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கும் தாலிச்செயினை பெற்றுக்கொண்ட ரஞ்சனி மனமாற நன்றி தெரிவித்தார்

Total Page Visits: 183 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!