Anbil mahesh byte | ஸ்டாலினும் ராகுலும்
ஸ்டாலினும், ராகுலும் ஒரே போன் காலில் இந்த பிரச்சனையை முடித்துவிடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அன்பில் மகேஸ் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நல்ல புரிதலான உறவில் இருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது. யார் என்ன வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கூட்டணியை இவ்வளவு தூரம் கொண்டு செல்வது சாதாரணமானது கிடையாது. கொள்கை ரீதியாக கூட்டணி அமைத்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை முடித்துவிடுவார்கள். கூட்டணி குறித்து 2 தலைவர்களும் இறுதி முடிவு எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Total Page Visits: 111 - Today Page Visits: 2
