உண்மையின் உறைவிடம்…

Speaker ombirla | ஓம் பிர்லா அதிர்ச்சி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தது புயலை கிளப்பியிருந்தது. எப்படி இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் மோடி உரையாற்ற வேண்டும். எனவே அவரது பேச்சுக்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் உரையாற்றாமல் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Total Page Visits: 113 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!