BJP Annamalai Byte | அண்ணாமலை விலகல்
பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார். மேலும், தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
Total Page Visits: 102 - Today Page Visits: 2
