Tiruvallur heavy rain | திருவள்ளூர் கனமழை
திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் பாதிப்படைந்த பயிர்களின் சேதம் குறித்து கணக்கிடும் பணியை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் அளவிற்கு மா மரம் தென்னை,வாழை மல்லி, தர்பூசணி , காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் அளவிற்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை பெயர்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது குறிப்பாக சோழவரம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் அம்பத்தூர் மற்றும் ஈக்காடு வட்டாரங்களில் கீரைகள் கத்தரி, வாழை, வெண்டை முருங்கை மிளகாய் போன்ற பயிர்கள் மற்றும் நெல் சாகுபடி பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளன பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பு மற்றும் சேதாரம் மதிப்பினை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வருவாய்த்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றன மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி வேதவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி பூபதி மற்றும் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் திரு குமரவேல் தலைமையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சோழவரம் வட்டாரத்தில் பயிர்கள் மதிப்பீட்டை கணக்கிட்டனர் பாதிப்படைந்த விவசாயிகளின் நிலங்களை கள ஆய்வு மேற்கொண்டனர் தொடர்ந்து தங்களுடைய நிலத்தில் உள்ள பயிர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் பயிரிடிய சேத மதிப்பீடு எவ்வளவு இருக்கிறது என்றும் அவர்கள் மதிப்பீடு செய்தனர் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் ரா. குமரவேல் அவர்கள் தெரிவித்தார் தொடர்ந்து விவசாயிகளிடம் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றியவுடன் பயிர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து வகைகள் மற்றும் மழைக்காலங்களில் தற்போது எந்த பயிர்களிலும் பயிரிட வேண்டாம் என்றும் தண்ணீர் சுழன்றுள்ள பகுதியில் உள்ள முருங்கை வெண்டைக்காய் எப்படி பாதுகாத்து மீண்டும் அதற்கு எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார். வேளாண்மை குறித்து திருமதி வேதவல்லி அவர்கள் நெற்பயிர்கள் சேதம் அடைய இடங்களை பார்வையிட்டார் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் எவ்வளவு என்றும் அதன் மதிப்பீடு செய்தார் தொடர்ந்து சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீடு செய்து இருக்கிறீர்களா என்றும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து மழைக் காலங்களில் நெற்பயிர்கள் எப்படி பாதுகாக்க வேண்டும் எந்த மாதிரியான உரங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்தும் விளக்கமாக விவசாயிகளிடம் தெரிவித்தா
