Red alert districts | வெளியே வர வேண்டாம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று (நவ.29) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, நாளை (நவ.30) திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்டும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவ.29, 30 ஆகிய தேதிகளில் வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 70-80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வரும் 1 ஆம் தேதி முதல் மழை படிப்படியாகக் குறையக் கூடும்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகவும், கடலோர தமிழகத்தில் மிகத் தீவிரமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். இன்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
