உண்மையின் உறைவிடம்…

admin

Thirumavalavan about admk | அதிமுக மெல்ல மெல்ல

ர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக காவி […]

OPS Joins DMK | கடம்பூர் ராஜூ கருத்து

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னால் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நாட்டு மக்கள் இன்று […]

Minister Amitshah plan | அமித்ஷாவின் வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு இன்று வருகிறாா். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் நாளை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், […]

TVK Vijay Speech | விஜய்யின் அதிரடி பேச்சு

பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என விஜய் உரையாற்றியுள்ளார். விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள் இது ஸ்டாலின் சாரி ஆப்பரேட்டிங் புரொசிஜர் என குற்றம்சாட்டினார். விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி […]

MK Stalin announces | முதல்வர் முகஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு முதல்வர் பதிவிட்டிருப்பதாவது: ”தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15ம் தேதி வாக்கில் […]

Youtuber Kerala case | யூடியூபருக்கு ஜாமின்

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. கேரள பேருந்தில் தன்னை ஒருவர் தவறாக தொட்டதாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட நபரை வீடியோ எடுத்த ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் […]

TVK Meeting salem | தவெக சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நாளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய்யும் கலந்துக்கொள்ள உள்ளதால், இதற்காக ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் தவெக கூட்டம் நடக்கவுள்ள இடத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சேலத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாவட்டம் பிரிப்பதற்கு முன்பாக மாங்கனி மாவட்டம் என […]

Canada school incident | கனடாவில் பயங்கரம்

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது […]

Rahul gandhi angry | பாரத மாதாவையே

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சங்னகளை முன்வைத்துள்ளார். அப்போது, “அமெரிக்க அதிபட் டிரம்ப், கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய தரவுகளை அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடி நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு […]

DMK VS Congress | காங்கிரஸுக்கு அடி

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் எங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன உள்ளது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும், திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

manipur violence | மணிப்பூரில் வன்முறை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குள் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக மணிப்பூரில் 2 நாட்களில் மட்டும் 30 வீடுகள் வரை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் […]

BJP Annamalai questioned | அண்ணாமலை கேள்வி

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடாதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.எத்தனையோ முறை மதுரைக்கு சென்ற முதல்வர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருக்கலாமே? எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு தாமதங்களை செய்தார்.மரங்களை வெட்டவோ, நிலம் கையகப்படுத்தும் பணிக்கோ எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

PM Modi speaks | நெருங்கிய உறவு

இந்தியா, மலேசியாவுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் சமீப ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது விரிவான மூலோபாய பங்களிப்பை நாம் மேலும் வலுப்படுத்துவோம் என கூறினார். மேலும்இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத்தில் பங்களிப்பை மேம்படுத்தவும், நமது ஒத்துழைப்பை […]

U19 worldcup won | சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம் வென்ற யூ19 இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 7.50 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இளம் வீரர்களின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ரூ. 7.50 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

TN Budget 2026 | தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை விதி எண் 26/1-ன் கீழ் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2026- 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் […]

Pakistan incident | பாகிஸ்தான் சம்பவம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Gold rate today | தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ. 14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் மாலையில் மாற்றமின்றி ரூ.280க்கு […]

DMK Youth conference | தயாராகும் திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. தொடர்ந்து திமுக தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை விருதுநகரில் திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடும் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகுகின்றன. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக […]

Speaker ombirla | ஓம் பிர்லா அதிர்ச்சி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை […]

Jayalalitha Assets | ஜெயலலிதாவின் சொத்துகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Today weather report | வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், […]

Today weather update | வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, […]

TVK Vijay statement | தவெக விஜய் ஆவேசம்

திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி என விஜய் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. […]

ADMK Election manifest | அதிமுக முக்கிய அறிவிப்பு

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்னதாகவே 5 வாக்குறுதிகளை அளித்திருந்தார் இந்நிலையில் மீண்டும் 5 வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். இதில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும். கல்வி கடனை ரத்து செய்வோம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். தமிழர்களின் […]

Today Weather update | வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (பிப்.4) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

TVK Statment Release | தவெகவின் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி […]

BJP Annamalai Byte | அண்ணாமலை விலகல்

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி […]

tibetan spritual leade | தலாய் லாமாவுக்கு விருது

2026-ம் ஆண்டுக்கான 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார். தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ என்ற அவருடைய ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.அவர் […]

Vijay condemns MKStalin | தவெக விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், “சிஎம் சார், ஸ்டாலின் சார், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில், “சில அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைப் பார்த்து ராத்திரியில் தூக்கம் வரவில்லை” என்று சொன்னீர்கள். அந்த வீடியோகூட இன்னும் இணையத்தில் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஒருவேளை அவர் என்றாவது […]

HRaja Hospitalized | ஹெச்.ராஜாவுக்கு என்னாச்சு

சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் […]

TVK 3rd anniversary | தவெகவின் கொண்டாட்டம்

தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில், வரும் 2ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நாளில் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். வெற்றித் தலைவர் அவர்களுக்கு வாகை மாலையை அணிவிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

union budget 2026 | மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 […]

gold rate today | மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் […]

sellurraju slams | முக்கிய புள்ளி சாடல்

வீட்டில் ஒரு ஓட்டு உள்ளது என்று விஜய் வாயில் வடை சுடுகிறார் என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , “திமுக பலம் பொருந்திய கூட்டணி என்று முதல்வர்தான் சொல்கிறார். காங்கிரஸ், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்கின்றது. ஊழலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று சொல்லி டிவியை உடைத்தவர் கமல்ஹாசன். அரசியலில் உலகநாயகனாவார் என்று நினைத்தால் நகைச்சுவை நடிகராகிவிட்டார் […]

Actress kasthuri questioned | நடிகையின் கேள்வி

ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை விஜய் பேசாதது ஏன் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் […]

TN Weather update | வானிலை மையம் தகவல்

சென்னையில் பெய்து வரும் பரவலான மழை மற்றும் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததுஇந்நிலையில், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]

admk accuses tvkvijay | விஜயை சாடிய அதிமுக

பல ஆண்டுகளாகத் தனது திரைப்படங்களின் டிக்கெட்டுகளைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘பிளாக்’கில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஐடி விங் பவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் […]

mk stalin speech | முதல்வரின் பேச்சு

டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து […]

america snow storm | அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவை வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் உருவாகும். இதனால், மழை மற்றும் கடும் பனி இணைந்து உறைபனி மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீண்ட நேர மின் தடைகள் ஏற்படலாம், அதிக அளவில் மரங்கள் முறிந்து விழலாம், மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு போக்குவரத்து […]

Seeman latest speech | நாம் தமிழர் சீமான்

எனக்கும், என் கொள்கைக்கும் யாரும் போட்டியில்லை என சீமான் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு. சீமானுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும் எனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என சொல்வதற்கு ஒரு ஆட்சியா? ஒரு தலைவரா?. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு […]

Sengottaiyan speech | விஜய் தான் ஹீரோ

விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர். அதனை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திரைப்படத்தில் அவர் ஹீரோ. எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசில் ஹீரோவாகவும் அவர்தான் வரப்போகிறார். அதனை யாராலும் மாற்ற முடியாது.பணம் இல்லாமலேயே வெற்றிபெறக்கூடிய இயக்கம் தான் நம்முடைய தளபதி இயக்கம். எங்கே சென்று கேட்டாலும் அவருக்குத்தான் ஓட்டு. நேற்றைய பாஜக 5 லட்சம் பேர் வருவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் 60 ஆயிரம் சேர் தான் போட்டார்கள். […]

Shimla snow rain | கடும் பனிப்பொழிவு

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இன்று அடர்த்தியான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைச் சிகரங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் பனிப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கவர் காட்சியால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TTV Dhinakaran Speech | நாங்க எல்லாம் ஒண்ணு

பங்காளி சண்டை முடிந்துவிட்டது , நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

CM MKStalin Tweets | தமிழ்நாட்டில் ஓடாது

பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே, மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்திர பிரதேசம், […]

karur supreme court | உச்சநீதிமன்றம் வேதனை

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி சூர்ய காந்த், ‘தங்களது அடிப்படை உரிமை எனக்கூறி டெல்லியில் போராட்டம் நடத்துவோரை, பள்ளி குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடத்தில் நடத்துமாறு நம்மால் நெறிப்படுத்த முடியும். ஆனால் சென்னையில் ஒரு பேரணி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; அங்குள்ள மைதானத்தில் 10,000 பேர் மட்டுமே கூட […]

Jammu kashmir accident | ராணுவ வாகன விபத்து

ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், தனலாவில் உள்ள படேர்வா – சாம்பா சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 10 வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து படேர்வா மாவட்ட மருத்துவ அதிகாரி […]

TVK Whistle symbol | விசில் போடு ஆர்மி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தவெகவின் இந்த சின்ன ஒதுக்கீடு கட்சியின் தேர்தல் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விசில் சின்னம் தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட சின்னம் என்பதால், வாக்காளர்களிடம் எளிதில் அடையாளம் காணப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தவெக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25-ஆம் தேதி […]

sunita-williams-retires | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, டிசம்பர் 27, 2025 முதல் இவரது ஓய்வு அமலுக்கு வந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் […]

Today gold rate | தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், […]

vaithilingam joins dmk | தாய் கழகம் திமுக

திமுகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. இன்று தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின்.அதனால் அண்ணா தொடங்கிய தாய்கழகத்தில் இணைந்துள்ளேன். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது […]

chile wild fires | பயங்கர காட்டுத்தீ

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார்.சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன. இதனை தொடர்ந்து, 50 […]

chile wild fires | பயங்கர காட்டுத்தீ

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார்.சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன. இதனை தொடர்ந்து, 50 […]

Spain train accident | ஸ்பெயின் ரயில் விபத்து

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் மலகா பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோர்டோபா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் திடீரென தடம்புரண்டு அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு சென்றது.அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டு […]

pmmodi welcomes uae | ஆரத்தழுவி வரவேற்பு

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். புது டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபரை மரபுப்படி வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து […]

Heavy rain flood | கனமழை,வெள்ளம்

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த […]

TVK Vijay Announces | விஜய் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-கழகத் தோழர்களுக்கு வணக்கம்.தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.தேர்தல் பிரசாரக் குழு விவரம்:-

Palamedu jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் முதலிடம் பிடித்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 களைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் […]

Minister sekarbabu assured | அமைச்சர் சேகர்பாபு உறுதி

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்தார். சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை இன்று அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.இந்த நிகழ்வின் போது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி […]
error: Content is protected !!