TN Governor Changed | ஆளுநர் திடீர் மாற்றம்
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆனந்தபோஸுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் ராஜினாமா செய்தது சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
Total Page Visits: 97 - Today Page Visits: 2
