உண்மையின் உறைவிடம்…

opaneerselvam byte | ஓ.பன்னீர்செல்வம் உறுதி

இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையேற்று, பல்வேறு இயக்கங்களில் இருந்து திமுகவில் இணைகின்ற நிகழ்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பட்ட மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை மக்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் 70, 80 சதவீதம் மேல் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உள்ளது” என்றார்.

Total Page Visits: 121 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!