உண்மையின் உறைவிடம்…

TN Voter List | பட்டியல் வந்தாச்சு..!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இத்தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது.இதற்காக, கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது.இதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் – 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்

Total Page Visits: 93 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!