Edappadi condemns dmk | என்ன செஞ்சீங்க
திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதை தடுக்க என்ன செய்தது?
திமுக அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) என்ன செய்துகொண்டு இருந்தது. இந்த கையாலாகாத திமுக ஆட்சியை தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்துக்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழகத்தில் அமைதி நிலை திரும்ப, திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
