america snow storm | அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவை வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் உருவாகும். இதனால், மழை மற்றும் கடும் பனி இணைந்து உறைபனி மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீண்ட நேர மின் தடைகள் ஏற்படலாம், அதிக அளவில் மரங்கள் முறிந்து விழலாம், மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம்.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூ மெக்ஸிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும். மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை இது தாக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total Page Visits: 165 - Today Page Visits: 2
