Same date birthday | கடலூரில் ஒரு அதிசயம்
கணவன் – மனைவி இருவரும் ஒரே பிறந்த நாளை கொண்டிருந்த நிலையில் பிறந்த குழந்தையும் அதே நாளில் பிறந்து அசத்தியத்துடன் தந்தை பிறந்த அதே கிழமை மற்றும் நட்சத்திரம் ரத்த வகை என அனைத்திலும் ஒற்றுமையாக
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துரைசாமி நகர் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் – சுபாஶ்ரீ தம்பதிகள் இருவரும் 22 ம் தேதியை பிறந்த நாளாக கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையும் தற்பொழுது டிசம்பர் 22ஆம் தேதியே பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். சுகப்பிரசவமாக பிறந்த இந்த குழந்தை ஐந்து ஒற்றுமைகளில் தந்தையுடன் சேர்ந்திருப்பது மிக அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அதாவது பிறந்தநாள் 22 பிறந்த மாதம் டிசம்பர், பிறந்த கிழமை ஞாயிற்றுக்கிழமை, இருவரின் ரத்த வகையும் ஒன்று மேலும் இருவரின் பிறந்த ராசியும் ஒன்றாக அமைந்துள்ளது அதிசயமாக பார்க்கப்படுகிறது. குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (IBR) மூலம் சான்றளிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக தந்தை மற்றும் மகன் 5 ஒரே மாதிரியான பிறந்தநாள் காரணிகளை கீழ் கண்டவாறு பகிர்ந்து உள்ளது.
தந்தை (ஆகாஷ் ஆர்.) மற்றும் மகன் (ஏ.எஸ். பிரபஞ்சன்) ஆகியோருக்கு இடையேயான இந்த தனித்துவமான ஒற்றுமை தேசிய அளவில் சரிபார்க்கப்பட்டு, அதன் அரிதான தன்மை மதிப்பிடப்பட்டுள்ளது:
- 1. தேதி: 22 (இருவருக்கும்)
- 2. மாதம்: டிசம்பர் (இருவருக்கும்)
- 3. கிழமை: ஞாயிறு (இருவருக்கும்)
- 4. இரத்த வகை: ஓ பாசிட்டிவ் (இருவருக்கும்)
- 5. மேற்கத்திய ராசி: மகரம் (இருவருக்கும்)
சரிபார்ப்பு நிலை: - ‘IBR சாதனையாளர்’ என சான்றளிக்கப்பட்டது.
- இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மூலம் புள்ளிவிவர அரிதான தன்மை அங்கீகரிக்கப்பட்டது.
- தாய் (ஆர். சுபாஸ்ரீ ஆகாஷ்) அவர்களும் 22 ஆம் தேதி பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
