puducherry ration shop | இனி ரேஷன் கடைகளில்
புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கி வரப்படும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கேழ்வரகு கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமானது என்பதால், அரசு இதனை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Total Page Visits: 235 - Today Page Visits: 2
