ADMK EPS Speech | திமுக ஆட்சியில் ஊழல்
அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தீய சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.
நாட்டு மக்களைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாரிசாகப் பார்த்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதல்வர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார். தேர்தல் நெருங்குவதால் மடிக்கணினி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திமுக அரசால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஊழலும் போதைப் பொருளும் அதிகரித்துள்ளது. கரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஓராண்டு காலம் ஆட்சியை நடத்திக் காட்டினோம். விலைவாசி தற்போது உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்நிலையில், அதன் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
