உண்மையின் உறைவிடம்…

Akash lockup death | பிரேத பரிசோதனையில்

அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை மருத்துவக் குறிப்புகள் உணர்த்துகின்றன. அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை மருத்துவக் குறிப்புகள் உணர்த்துகின்றன.

வெளிப்புறக் காயங்களைத் தாண்டி, ஆகாஷின் உட்புற உறுப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையின் முன்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் புள்ளி வடிவ ரத்தக் கசிவுகள் பதிவாகியுள்ளன. நுரையீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் ரத்தக் கூட்டத்துடன் வீங்கிய நிலையில் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இறப்புக்கான துல்லியமான காரணத்தை இப்போதே உறுதி செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரசாயன பகுப்பாய்வு மற்றும் திசுப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்காகக் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரிகள் மதுரை மண்டல அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Total Page Visits: 100 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!