DMDK LK Sutheesh | தேமுதிக அறிவிப்பு
தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தேமுதிக சார்பில் வெளியான அறிவிப்பில், ‘2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று தலைமை கழகத்தின் சார்பாக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Total Page Visits: 132 - Today Page Visits: 3
