உண்மையின் உறைவிடம்…

OPS Joins DMK | கடம்பூர் ராஜூ கருத்து

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னால் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நாட்டு மக்கள் இன்று தெரிந்து கொண்டனர். நேற்றைய தினம் சம்பிரதாயமாக தான் திமுகவில் இணைந்திருக்கிறார். எவ்வளவு நம்பிக்கை துரோகமாக இந்த இயக்கத்தில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எந்த கட்சியாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்க முடியாது. அதிமுக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் ஒரு இலையை எம்ஜிஆராகவும், மற்றொரு இலையை ஜெயலலிதாவாக பார்ப்பார்கள். வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் என கூறினார்.

Total Page Visits: 135 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!