உண்மையின் உறைவிடம்…

Canada school incident | கனடாவில் பயங்கரம்

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் 25 பேர் காயம் அடைந்திருந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 155 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!