உண்மையின் உறைவிடம்…

Rahul gandhi angry | பாரத மாதாவையே

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சங்னகளை முன்வைத்துள்ளார்.

அப்போது, “அமெரிக்க அதிபட் டிரம்ப், கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய தரவுகளை அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடி நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். அமெரிக்காவின் விவசாயப் பொருட்களை இந்திய சந்தைகளில் அனுமதித்ததன் மூலம் விவசாயிகளின் நலன்களை நாசமாக்கியுள்ளீர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்தியாவின் ஜவுளித் தொழில் “முடிந்துவிட்டது” என்றும் அவர் குற்றம் சாட்டினார். வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நமது எரிசக்தி பாதுகாப்பு முழுவதையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்து மொத்தமாக சரணடைந்துள்ளீர்கள். பாஜகவின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்க பிரதமர் மோடி இந்தியர்களின் எதிர்காலத்தை விற்றுவிட்டார் என்று கடுமையாக சாடினார்.

Total Page Visits: 96 - Today Page Visits: 3

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!