உண்மையின் உறைவிடம்…

Actress kasthuri questioned | நடிகையின் கேள்வி

ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை விஜய் பேசாதது ஏன் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் அது குறித்து ஏன் பேசவில்லை. ஊழல் நடந்தால் தட்டி கேட்பேன் எனக் கூறும் விஜய், ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை பேசாதது ஏன்? என மக்கள் என்னை கேட்க சொன்னதாக கேட்கிறேன். என்.டி. ஏ கூட்டணி ஓடாத டப்பா என்ஜின் என ஸ்டாலின் கூறுகிறார்.ஆனால் விரைவில் திமுக டப்பா டான்ஸ் ஆட போகிறது.

Total Page Visits: 109 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!