உண்மையின் உறைவிடம்…

Tamilnadu voter list | வாக்காளர் வரைவு பட்டியல்

எஸ்.ஐ.ஆருக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.61 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 வக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும் பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும் உள்ளனர். மொத்தமாக வரைவு வாக்காளர் பட்டியலில் 5,43,76,755 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

நீக்கப்பட்டவர்களில் இறந்துபோன வாக்காளர்கள் 26,94,672 பேர். முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 பேர். இரட்டைப் பதிவு கொண்டவர்கள் 3,39,278 பேர். மொத்தமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Total Page Visits: 156 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!