Cyclone Ditwah alert | அச்சுறுத்தும் டிட்வா புயல்
வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா ,
சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு அருகே 350 கி.மீ துாரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு வட தமிழகத்த…
