Ditwa cyclone alert | அச்சுறுத்தும் டிட்வா புயல்
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புயல் காரணமாக ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாகை, புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது நாளை சனிக்கிழமை என்பதால் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
