sengottaiyan joins TVK | செங்கோட்டையனுக்கு பதவி
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; 2026 -ல் தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு ‘தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
