உண்மையின் உறைவிடம்…

Tiruvallur welfare scheme | நலத்திட்ட உதவிகள் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா திருவேற்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப்,எம் பி சசிகாந்த் செந்தில் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 333.26 கோடி மதிப்பீட்டில் 377 முடிவிட்ட திட்ட பணிகளையும் ரூபாய் 137.38 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளையும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். காணொளி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு கூடம் பல ஆண்டுகளாக இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் புதிதாக சத்துணவு கூடம் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.மேலும் 1, 12,294 பயனாளிகளுக்கு சுமார் 1000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய துணை முதலமைச்சர் மற்ற மாவட்டங்களில் இல்லாத சிறப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொன்னேரி, குமரிப்பூண்டி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் விளையாட்டுத்துறை சார்பில் மினி ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் அதே போன்று பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கார்டு வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது உங்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் அதிகாரிகளே மக்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்வு கண்டு வருகின்றனர் என்றும் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு சில பேருக்கு உரிமை தொகை வரவில்லை என்ற கோரிக்கை வந்த நிலையில் அதனையும் சரி செய்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முழுவதுமாக மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள், மகளிர், ஏழை எளிய மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இந்த அரசு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் மக்களுக்கு ஆதரவாக உள்ள அரசிற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் திராவிடமாட்டல் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

Total Page Visits: 59 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!